சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலில் மாட்டுப்பொங்கல் விழா நடந்தது.கோயில் முன் கிராமத்தினர் பொங்கல் வைத்தனர். கோயில் காளைகளுக்கு வேட்டி, துண்டு, மாலைகள் அணிவித்து நேர்த்தி செலுத்தினர். பின்னர் காளைகள் தொழுவத்தி லிருந்து வெளியே அழைத்து சென்றனர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சிலர் சிங்கம்புணரிக்கு மஞ்சுவிரட்டு காளைகளை அழைத்து வந்தனர். நகர் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மஞ்சுவிரட்டு காளைகளை திருப்பி அனுப்பினர். கிருங்காக்கோட்டை, அ.காளாப்பூர், முறையூர், மு.சூரக்குடியில் பொங்கல் விழா நடந்தது. டி.எஸ்.பி.,முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.