விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி கிராமத்தில் ஆயிரத்து 300 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து சீரமைக்க பொதுமக்கள் திருப்பணி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இக்கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி கைலாச நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர் மற்றும் சிறப்பு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் செய்தனர். பின்னர் நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை புதுச்சேரி சிவநேய செல்வர் சிவ சரவணன் செய்தார். பூஜை ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். தொரவி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.