திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் ஜன.30ல் நடக்கும் தெப்பத் திருவிழாவிற்காக தண்ணீர் நிரப்பப்படுகிறது.
கோயில் சார்பில் ஜி.எஸ்.டி., ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் மிதவை தெப்பம் அமைக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளுகின்றனர். அன்று தெப்பக்குளத்தினுள் காலை, இரவு தலா மூன்று சுற்றுக்கள் சுற்றி தெப்பத்திருவிழா நடக்க உள்ளது.இவ்விழாவிற்காக ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மழையின்றி தெப்பக்குளம் வறண்டது. ஆழ்துளை கிணறும் வறண்டது. இதனால் நிலை தெப்பத்தில் விழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தண்ணீர் இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.