பதிவு செய்த நாள்
15
ஜூன்
2011
11:06
ஓசூர்: ஓசூர், பெரியார் நகர் முருகன் கோவிலில், வைகாசி விஷாகத்தையொட்டி, 108 பெண்கள் பாலாபிஷேம் செய்து பூஜை செய்தனர். உழவர்சந்தை அருகே உள்ள மவுன விநாயகர் கோவிலில் இருந்து, 108 பெண்கள் பூஜை செய்து, பால்குடங்களை முக்கிய வீதிகளில் வழியாக, பெரியார் நகர் முருகன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் வந்தனர். அங்கு குருக்கள் ஏகாம்பரம் பூஜை செய்தார். பெண்கள், 108 பால்குடங்களை முருகனுக்கு அபிஷேகம் செய்தனர். கோவில் நிர்வாகி மோகன்குமார், பூபதி, ராமச்சந்திரன், சின்னப்பன், ராஜா, நாகராஜ் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.