திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2015 11:01
திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோயில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டு, எண்ணப்பட்டது. அதில் ரொக்கம் ரூ.5 லட்சத்து 59 ஆயிரத்து 788, தங்கம் 68 கிராம், வெள்ளி 213 கிராம் இருந்தது. மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் என கணக்கிடப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவண கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் முத்துக்கண்ணன் உடனிருந்தனர்.