Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுகாசன பெருமாள் கோவிலில் தைப்பூச ... ராகவேந்திரர் கோவில் ஆண்டு துவக்க விழா! ராகவேந்திரர் கோவில் ஆண்டு துவக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான சிவன் கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை தேவை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஜன
2015
11:01

தியாகதுருகம்: முடியனூர் ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் புணரமைப்புக்காக 40 லட்சம் ரூபாய் நிதியை மத்திய அரசு  ஒதுக்கீடு செய்த போதி லும், அதிகாரிகள் பணிகளை துவக்காததால் பக்தர்கள் அதிருப்தியில்  அடைந்துள்ளனர். தியாகதுருகம் அடுத்த முடியனூரில் நூற்றாண்டு பழமையான உண்ணாமலை அம்மன் உடனுறை ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீப திருவிழா விமர்சியாக நடக்கும்.இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் நடந்து வருகிறது. கோவிலின் மேற்கூரையில் 100  ஆண்டுகளுக்கு முன் கலைநயத்துடன் வரையப்பட்ட சுவாமி ஓவியங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கோவில் கட்டுமானம் சில  இடங்களில் சேதமமாகி பொலிவிழந்த நிலையில் உள்ளது. கோவில் முன்புறம் உள்ள 16 கால் மண்டபத்தின் மேற்புறத்தில் சுண்ணாம்பு கலவையால்  வடிக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.  இதை புணரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். நிதி ஒதுக்கீடு:இந்து அறநிலையத்துறை மூலம் 6.30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு கோவில் விமானம் புதுப்பிக்கப்பட்டது. கோவில் முழுவதும் செப்பனிட்டு புதுப்பிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசின் மூலம் 13 வது ஆவண பிரிவின் கீழ் இக்கோவிலை செப்பனிட்டு புதுப்பிக்கும் பணிக்காக 40 லட்சம் ரூபாய் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன் இதற்கான டெண்டர் விட்ட நிலையில்,  இதற்கான பணிகளை துவக்கமால் காலம் கடத்தி வ ருகின்றனர். இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும்  கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இது பக்தர்கள் மத்தியில் கடும்  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பணியை துவக்கி விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar