பதிவு செய்த நாள்
16
ஜூன்
2011
11:06
தென்காசி : தென்காசி கீழப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 19ம் தேதி வருஷாபிஷேக விழா நடக்கிறது. தென்காசி கீழப்புலியூரில் ஸ்ரீமத் நவநீதகிருஷ்ண சுவாமி கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் 19ம் தேதி வருஷாபிஷேக விழா நடக்கிறது. முன்னதாக 18ம் தேதி காலையில் நவநீதகிருஷ்ணர், வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இரவு சிறப்பு பூஜை, ராம பட்டாபிசேக கதை வில்லிசை நிகழ்ச்சி, நள்ளிரவில் கிருஷ்ணர் பிறப்பு வில்லிசை நிகழ்ச்சி, சிறப்பு பூஜை நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான 19ம் தேதி காலையில் கணபதி ஹோமம், ஆஞ்சநேய ஹோமம், கிருஷ்ண ஹோமம், சுதர்சன ஹோமம், தேவி ஹோமம், வில்லிசை நடக்கிறது. காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் நவநீதகிருஷ்ண சுவாமிக்கும், வீர ஆஞ்சநேயருக்கும் ராமேஸ்வரம், குற்றாலம் தீர்த்தம் கொண்டு அபிஷேகம், வருஷாபிஷேகம் நடக்கிறது. மதியம் சிறப்பு அலங்கார பூஜைக்கு பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் குற்றால தீர்த்தம் புறப்பாடு, இரவு வில்லிசை, சிறப்பு அலங்காரம், குற்றால தீர்த்தம் வீதி உலா வந்து கோயில் வந்து சேருதல், சிறப்பு பூஜை, தீபாராதனை, நள்ளிரவில் ராமர் பட்டாபிஷேகம், சிறப்பு பூஜை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்து வருகின்றனர்.