செண்பகவல்லியம்மன் கோயிலில் வெளிப்பிரகாக மண்டபம் கட்ட பூமிபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2011 11:06
கோயில்பட்டி : கோயில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் ரூ.60 லட்சம் செலவில் வெளிப்பிரகார மண்டபம் கட்டும் பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. கோயில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் ராஜகோபுர திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அடுத்த சில மாதங்களில் மகா கும்பாபிஷேகத்தை எதிர்நோக்கியுள்ள செண்பகவல்லியம்மன் கோயிலில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள், அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனடிப்படையில் செண்பகவல்லியம்மன் கோயில் மதில் சுவருக்கு அடுத்தாற்போல் நான்கு மாடவீதிகளிலும் சுமார் ரூ.60 லட்சம் செலவில் வெளிப்பிரகார மண்டபம் புதிதாக கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் துவங்க நேற்று வாஸ்து செய்து பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு அதிமுக அமைப்புசாரா ஓட்டுனரணி மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். அதிமுக பிரமுகர் ரத்தினராஜ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வெளிப்பிரகார மண்டபம் கட்டும் பணிகள் துவங்கியது. சிறப்பு பூஜைகளை சுவாமிநாதன், சங்கரன், கோபாலகிருஷ்ணன், செண்பகராமன் ஆகிய பட்டர்கள் செய்தனர். நிகழ்ச்சியில் அதிமுக ஜெ., பேரவை நகர செயலாளல் ராமர், அமைப்புசாரா ஓட்டுனரணி இணை செயலாளர் விஜயன், அதிமுக பிரமுகர் சவுந்தர், 16வது வார்டு கிளை செயலாளர் சித்திரைவேல், செண்பகவல்லியம்மன் கோயில் திருப்பணிக்குழு தலைவர் நாகஜோதி, தலைமை எழுத்தர் ராமலிங்கம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.