கரூர்: கரூர் சணப்பிரட்டி நரிகட்டியூர் பத்ரகாளியம்மன் கோயில் நடந்த வைகாசி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் சணப்பிரட்டி நரிகட்டியூர் பத்ரகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலில் ஒன்றாகும். அந்த கோயிலில் நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் வைகாசி விழா தொடங்கியது. 10.30 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. பின், 11.30 மணிக்கு பக்தி நெறி தலைப்பில் மேலை பழனியப்பன், அம்மன் அருள் தலைப்பில் மருதநாயகம் கியோரின் ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. மாலை 3 மணிக்கு சஷ்டி குழுவை சேர்ந்த சுரேஷ் பாபு சார்பில் திருவிளக்கு பூஜை மற்றும் 108 கலச பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி காளிமுத்து, திருப்பணி குழு மற்றும் சேவை குழுவினர் செய்திருந்தனர்.