கூடலூர் : கூடலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே புதிய கோயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கூடலூர் பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தும் வகையில், பஸ் ஸ்டாண்டின் பின்புறம் உள்ள போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இடத்தை கூடலூர் போலீசாரும், போக்குவரத்து துறையினரும் இணைந்து சமன்படுத்தினர். சக்தி முனீஸ்வரன் கோவிலை இடமாற்றி புதிய கோயில் அமைக்க முடிவு செய்தனர். இதற்கான விழாவுக்கு கோயில் அறக்கட்டளை நிர்வாகி சிவராஜ் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், கோயில் தர்மகர்த்தா பழனியப்பன், இந்து முன்னனி ஒன்றிய பொது செயலாளர் சாமி, கோயில் அறக்கட்டளை பொருளாளர் ராஜ்குமார், உறுப்பினர்கள் உண்ணி, இளங்கோ, கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், ராஜமணி, தலைமை காவலர்கள் சுரேஷ், ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.