பதிவு செய்த நாள்
16
ஜூன்
2011
11:06
கும்பகோணம்: எஸ்.புதூர் சனத்குமரேஸ்வரர் ஆலயத்தில் 10ம் ஆண்டு ஸ்ம்வஸ்த்ர அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். திருவிடைமருதூர் அருகே உள்ள எஸ்.புதூர் கிராமத்தில், குபேரன் வழிபட்ட சௌந்தர்நாயகி சமேத சனத்குமரேஸ்வரர் திருக்கோயில், சீதளாதேவி மகாமாரியம்மன், பிடாரி அம்மன், மன்மதன் திருக்கோயில்களின் 10ம் ஆண்டு ஸ்ம்வஸ்த்ர அபிஷேக விழா நடந்தது. காலை 10 மணிக்கு யாகபூஜை,11 மணிக்கு ஸம்வஸ்த்ர அபிஷேகம், 12 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை ஆறு மணிக்கு சீர்வரிசை ஊர்வலமும், 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு எட்டு மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. விழாவில், முக்கிய பிரமுகர்களும், ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் தென்னரசு, அறங்காவலர் குழுத்தலைவர் திலகவதி ராஜாஜி, அறங்காவலர்கள் சிவகுமார், ராஜேஸ்வரி மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.