திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அடுத்த ஆதிரெங்கம் ஸ்ரீ ரெங்கநாதர் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா தேராட்டம் நடந்தது. தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா, கடந்த ஐந்து தேதி முதல் நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை பஞ்சாயத்து தலைவர் முருகதாஸ் வடம் பிடித்து துவக்கி வைத்தார். தேரில் ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூமி தேவியுடன் எழுந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பிச்சையாம்மாள், முன்னாள் துணைத் தலைவர் பக்கிரிசாமி, பிரம்மோற்சவ சபை சுப்பையாபிள்ளை, பிறவி மருந்தீசர் கோயில் கணக்கர் சீனிவாசன் மற்றும் பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பிரம்மோற்ஸவ சபை அமைப்பாளர் சிவசுப்பிரணியன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.