கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. கடலூர் பாடலீஸ்வரர் கோவில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.
மாலை 4:30 மணியளவில் நந்தி பகவானுக்குபால், தயிர், சந்தனம், மஞ்சள் போன்ற சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. பண்ருட்டி: திருவதிகை அம்பாள் பெரியநாயகிசமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள்நடந்தது. மாலை 6 மணிக்கு தீபாராதனை நடந்தது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.