பதிவு செய்த நாள்
02
பிப்
2015
02:02
விருத்தாசலம்: க.தொழூர் செல்லியம்மன், திரவுபதியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
கம்மாபுரம் அடுத்த க.தொழூர் செல்லியம்மன், திரவுபதியம்மன், மாரியம்மன், விநாயகர், முருகன்,ஐயப்பன், வீரன் கோவில்கள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 30ம் தேதி காலை விக்னேஸ்வரபூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், மாலை முதல் கால யாக பூஜை, அஷ்டபந்தன பூஜை, திரவிய ஹோமம், தீபாராதனை நடந்தது.
நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாகபூஜை,விசேஷதிரவிய ஹோமம், தீபாராதனை, மாலை மூன்றாம் கால யாக பூஜை, தீபாரதனைநடந்தது. நேற்று (1ம் தேதி) கும்பாபிஷேகத்தையொட்டி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, விசேஷதிரவிய ஹோமம், நாடி சந்தானம், காலை 7:45மணிக்கு கோ பூஜை, 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 8:30 மணிக்கு செல்லியம்மன் விமான கலசத்தில் புனித நீர்ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஊராட்சித் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் பாஸ்கர், ஊராட்சி செயலர் ராமலிங்கம், வார்டு உறுப்பினர்கள்உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.