திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான பழனியாண்டவர் கோயிலில் நாளை(பிப்.3) தைப்பூச திருவிழா நடக்கிறது.மலைக்கு செல்லும் பாதையில், மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள மூலவர் பழனிஆண்டவருக்கு உச்சி கால பூஜையின் போது 100 லிட்டர் பால் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்படும். புரட்டாசி மாதம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள வேல் மலைக்கு கொண்டு செல்லப்படும் அன்றும், தைப்பூசத்தன்றும் பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.