அன்னுார் : மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று (பிப்.,2ம் தேதி) நடக்கிறது.
அன்னுார் அடுத்த மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில் மேலைத்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலில், 51ம் ஆண்டு தேர்த்திருவிழா, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 31ம் தேதி காலை, 10:15 மணிக்கு அம்மன் அழைத்தலும், சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தன. வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி சமேதரராக அருள்பாலித்தார். திருக்கல்யாண உற்சவத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம்வழங்கப்பட்டது. இரவு புஷ்பக விமானத்தில் சுவாமி திருவீதியுலா நடந்தது.இன்று காலை, 5.30 மணிக்கு, வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக தேருக்கு எழுந்தருளுகிறார். காலை, 11:00 மணிக்கு, தேரோட்டம் துவங்குகிறது. அறங்காவலர்கள், பொதுமக்கள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர். 3ம் தேதி இரவு பரிவேட்டை நடக்கிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் மருத பாண்டியன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.