பதிவு செய்த நாள்
03
பிப்
2015 
12:02
 
 விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழுப்புரம் தாலுகா, அரசமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் ராஜகோபுரம், பரிவார சந்நிதிகள் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் காலை சுதர்சன ஹோமம், பெருமாள் திருமஞ்சனம், வாஸ்து ஹோமம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு அங்குரார்பணம், அக்னி பிரதிஷ்டை, 8:30 மணிக்கு மகாசாந்தி ஹோமம், தொடர்ந்து யாக சாலை பூஜைகள் துவங்கின.நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு நடந்தது. 
காலை 10:00 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், பெருமாள் சம்ப்ரோஷணம் நடந்தது.விழாவில் கூடுதல் தலைமை செயலாளர் கண்ணன், எம்.பி.,க்கள் ராஜேந்திரன், செஞ்சி ஏழுமலை, அமைச்சர் சம்பத் மனைவி கலைவாணி சம்பத் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேஷ்பாபு சுவாமி உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.