சின்னசேலம் : சின்னசேலம் அடுத்த ராயப்பனூரில் ஸ்ரீ காமாட்சி அம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி கடந்த மாதம் 30ம் தேதி முதல் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை யாக பூஜையும், மாலை 3ம் கால யாகபூஜையுடன் சாமி சிலைக்கு கண்திறந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தது.நேற்று காலை நாடிசந்தானம், மகா பூர்ணாஹூதி, உபசாரம் ஆகிய பூஜைகள் நடந்தது. காலை 10: 30 மணிக்கு ரத்தினசாமி மற்றும் கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது.நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் செல்வராஜ், கொளஞ்சி, கந்தசாமி, சுந்தரமூர்த்தி, அறங்காவலர் அய்யம்பெருமாள், ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி பாலன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.