பதிவு செய்த நாள்
03
பிப்
2015
01:02
திருப்புவனம்: திருப்பாச்சேத்தி மழவராயனேந்தலில் ஸ்ரீஅழகர்பெருமாள், ஸ்ரீபேச்சியம்மாள், ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கிராம மக்களால் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப் பட்டு திருப்பணி முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மலைச்சாமி தலைமையில் விழா கமிட்டியினர் செய்தனர். கடந்த 31ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கின.
முதல் நாள் அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. நேற்று காலை ஆறு மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும் 10 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசங்களுடன் சிவாச்சார்யார்கள் யாகசாலையை வலம் வந்தனர். 10.10 மணிக்கு புனித நீரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கண்ணன் சுவாமி கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருப்பையா, ஜெயபால், வங்கிக் கடன் தீர்ப்பாயம் ரவீந்திரபோஸ் முன்னாள் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம், சிவகங்கை மாவட்ட நீதிபதி தங்ககனி, திருவாரூர் மாவட்ட நீதிபதி பாலசுப்ரமணியன், கலெக்டர் முனுசாமி,மானாமதுரை குற்றவியல் நீதிபதி மதிவாணன், மழவராயனேந்தல் ஊராட்சி தலைவர் கீதாதேவி ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டனர்.