உளுந்தூர்பேட்டை : செங்குறிச்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், புண்யாகவாசனம், நித்ய ஹோமம், நான்காம் கால பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடந்தது.
காலை 10 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 9 மணிக்கு பெருமாள் சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பாடும் நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சவுந்திரராஜ அய்யங்கார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவில் குமரகுரு எம்.எல்.ஏ., ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ஞானமூர்த்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.