செஞ்சி: தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் நடந்த தைப்பூச விழாவில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடன்களைச் செலுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, தேவதானம் பேட்டை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று தைப்பூச விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து 8 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது.பகல் 1 மணிக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி அபிஷேகம் செய்து, அலகு குத்தியும், தேர் இழுத்தும் வீதியுலா வந்தனர். பகல் 3 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகமும், விபூதி அலங்காரமும் செய்தனர். 4 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி சுவாமிகள் மார்பு மீது மாவு இடித்தலும், மிளகாய் சாந்து அபிஷேகமும் நடந்தது.தொடர்ந்து செடல் சுற்றுதலும், 5 மணிக்கு தீமிதி விழாவும் இரவு சாமி வீதி உலாவும் நடந்தது.