வடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில், 144வது தைப்பூச பெருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அன்று மற்றும் அடுத்த நாள் காலை என, ஆறு காலங்களில் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். இன்று காலை, 10:00 மணிக்கு வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்பட்டு, மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். வள்ளலார் சித்தி பெற்ற அறை திறக்கப்பட்டு, மதியம், 12:00 முதல், மாலை, 6:00 மணி வரை, திரு அறை தரிசனம் நடைபெறும்.