பதிவு செய்த நாள்
05
பிப்
2015
12:02
புதுச்சேரி: கம்பன் நகர், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 8ம் தேதி நடக்கிறது.
ரெட்டியார்பாளையம், கம்பன் நகரில், கற்பக விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று (5ம் தேதி) காலை 8.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்குகிறது.
நாளை 6ம் தேதியன்று, காலை 8.30 மணிக்கு, லட்சுமி ஹோமம், தனபூஜை, நவகிரக ஹோமம், மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் 7ம் தேதி காலை 8.30 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. வரும் 8ம் தேதி காலை 6.00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை முடிந்து, காலை 9.45 விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம், 10.00 மணிக்கு மூலவர் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு, சிறப்பு மகா தீபாராதனை, இரவு 7.00 மணிக்கு கற்பக விநாயகர் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்துள்ளனர்.