Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முசிறியில் பிப்.,10ல் திருக்கல்யாண ... குழந்தை வேலப்பர் கோயில் கொடியேற்றம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் மகாமக திருவிழாவுக்கு ரூ. 200 கோடியில் திட்ட மதிப்பீடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2015
01:02

கும்பகோணம்: ""கும்பகோணம் மகாமக திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, 200 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 70 கோடிக்கு பணி நடைபெற்று வருகிறது, என, தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்தார்.

கும்பகோணத்தில், வரும், 2016 பிப்ரவரி, 22ம் தேதி, மகாமக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, தேவையான முன்னேற்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், தஞ்சை மாவட்ட கலெக்டர் தலைமையில், ஆலோனை கூட்டம் நடத்தி, அரசுக்கு அறிக்கை சமர்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கும்பகோணத்தில் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், துறை வாரியாக மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட கலெக்டருக்கு விளக்கம் அளித்தனர்.

அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெகந்நாதன்: கும்பகோணம் பகுதியில் உள்ள, 69 கோவில்கள், மகாமகத்தையொட்டி, 12 கோடியில் திருப்பணி செய்யப்படண்டு வருகிறது. இந்த பணி அனைத்தும் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிவ டைந்து விடும். கும்ப கோணத்தில் கோவில் மற்றும் தனியாருக்கு, நகராட்சிக்கு சொந்த மான குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படும். கோவில் தேர்கள் சீரமைக்கும் பணியும் விரைவில் முடிக்கப்படும்.

வரும் மார்ச், 4ம் தேதி இளைய மகாமகம் வருகிறது. அந்த விழாவை சிறப்பாக நடத்த, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

நகராட்சியின் நகரமைப்பு அலுவலர் முருகன்
: நகராட்சி சார்பில், ஆறு குளங்கள் தூர்வாரப்பட உள்ளது. பாதாள சாக்கடை இணைப்பு கூடுதலாக வழங்கவும், தெரு மின்விளக்குகள் பராமரிக்கவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தவும், செந்தில்நாதன்நகரில், ஒரு ஏக்கரில் மகாமக பூங்கா அமைக்கவும் திட்டங்கள் தயாரித்து, அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதில், 21.92 கோடி தி கிடைத்து, பணி நடந்து வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மலர்:
கும்பகோணம் நகரைச் சுற்றி, மூன்றாவது கட்டமாக, 9.14 கி.மீ., தூரமுள்ள சுற்றுச்சாலை அமைக்கப் படுள்ளது. கும்பகோணம் நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட உள்ளது. கும்பகோணம்- தஞ்சாவூர் நெடுஞ்சாலை பழுது இல்லாமல் பாதுகாக்கப்படும்.

பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் கந்தசாமி: காவிரி ஆற்றின் இரு கரையும் சுத்தம் செய்து நடைபாதை அமைக்கப் படும். பழவத்தான் கட்ட ளையில், விருந்தினர் இல்லம் கட்டப்பட உள்ளது. குடிதாங்கி கொள்ளிடம் ஆற்றில், தளமட்ட சுவர் அமைக்கவும், அணைக் கரையில் பூங்கா அமைக்கவும் திட்டங்கள் தயாரித்து ஒப்புதலுக்கும், திக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.

கும்பகோணம் ரயில்லைய மேலாளர் சிவராமன்: கும்பகோணம் ரயில் லையத்தில், 2, 3 பிளாட் பாரங்களை ட்டிக்க இடங்களை கையகப்படுத்தி தர வேண்டும். மாதுளம்பேட்டை, மாத்தி ரயில்கேட் உள்ள இடங்களில் சுரங்கப்பாதை இல்லை யென்றால், மேம்பாலம் அமைக்க, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.மகாமகத்திற்கு நாட்டின் பல பகுதியிலிருந்து சிறப்பு ரயிலும், அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில், திருச்சியிலிருந்து, மயிலாடுதுறை வரை, தொடர்ந்து இயக்க ர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பொதுப்பணித்துறை பொறியாளர் கோமகன்:
கும்பகோணம் மகாமக குளத்தினை சுற்றியுள்ள வீடு களில் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பழமையான வீடுகள் இருந்தால், அதை இடித்து அகற்ற நடவ டிக்கை எடுக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து, தஞ்சை மாவட்டகலெக்டர் சுப்பையன் பேசியதாவது:
கும்பகோணத்தில் மகாமகத்திருவிழா தொடர்பாக இதுவரை, ஆறு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறை சார்பிலும், என்னென்ன திட்டங்கள் றைவேற்றப்பட உள்ளது என்பது குறித்து இது வரை, 200 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து அனுப்பப் பட்டுள்ளது. இதில், 70 கோடி தி கிடைக்கப்பெற்று, பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் மின்வாரியம், போலீஸ் துறை, தீயணைப்புத் துறை, உணவு பாதுகாப்புத்துறை, மருத்துவத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால்  மட்டுமே நிகழ ... மேலும்
 
temple news
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கூத்தனூரில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவில் இன்று (செப்.,11) காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவில், சக்தி கொலுவில் அம்பாள், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் நேற்று ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்களில் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar