கொடைக்கானல்:கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதில் மேல்மலை, கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குழந்தை வேலப்பருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன.
கொடியேற்ற நாளிலிருந்து தினமும் சேவல், கிடா, சிங்கம், யானை, உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். முக்கிய திருவிழாவான தேரோட்டம் நிகழ்ச்சி பிப்., 14 அன்று நடைபெறும். பிப்.,15 குழந்தை வேலப்பரை வழி அனுப்பும் வைபவம் நடைபெறும்.