பதிவு செய்த நாள்
17
பிப்
2015
11:02
காஞ்சிபுரம்: திருப்புட்குழியில், விஜயராகவப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை, நேற்று நடந்தது. காஞ்சிபுரம் அடுத்துள்ள திருப்புட்குழியில், விஜயராகவப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தொண்டை மண்டலத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில், பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த கோவிலில், மாசி பிரம்மோற்சவம், 10 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு மாசி பிரம்மோற்சவம், கடந்த சனிக்கிழமை துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு, கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, கோவிலில் இருந்து புறப்பட்டார். பாலுசெட்டி சத்திரத்தில் மண்டகப்படி முடிந்த பின், திருப்புட்குழி மாடவீதி சுற்றி காலை, 11:00 மணியளவில், கோவிலை சென்றடைந்தார். இரவு, 7:00 மணியளவில் அனுமந்த வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மாடவீதிகளில் சுற்றிவந்தார்.