பதிவு செய்த நாள்
17
பிப்
2015
11:02
ஆர்.கே.பேட்டை: சோமநாதர் ஜோதிலிங்க தரிசனம் மற்றும் ஆன்மிக கண்காட்சி ஆர்.கே.பேட்டையில் நடந்து வருகிறது. இன்று, சிவராத்திரியை ஒட்டி, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழமை வாய்ந்த சோம்நாத் லிங்க தரிசனம், ஆர்.கே.பேட்டையில் நடந்து வருகிறது. பிரம்மாகுமாரிகள் இயக்கத்தினர், இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். நேற்று முன்தினம் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், இன்று சிவராத்திரியை ஒட்டி, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாழ்க்கை நெறிமுறை குறித்த ஆன்மிக பட கண்காட்சியும், புத்தக கண்காட்சியும் அரங்கில் இடம்பெற்று உள்ளன. மேலும், மனம், உடல் ஆரோக்கியத்திற்கான தியான பயிற்சி, மற்றும் முப்பெரும் தேவியர் தரிசன நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன. இதை தொடர்ந்து, நாளை முதல், ஒரு வார காலத்திற்கு தியான பயிற்சி வகுப்புகளும் நடைபெற உள்ளன. தரிசனம் மற்றும் தியான வகுப்புகளுக்கு அனுமதி இலவசம். நேற்று முன்தினம், துர்க்கை, காமாட்சி, மீனாட்சி தேவியர், பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர்.