பதிவு செய்த நாள்
17
பிப்
2015
12:02
பரமக்குடி : பரமக்குடி அங்காளபரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பணசுவாமி கோயில், மகாசிவராத்திரி, பாரிவேட்டை மற்றும் பால்குடவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு அனைத்து சுவாமிகளுக்கும் காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று காலை 10.15 மணிக்கு கொடியேற்றப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இன்று இரவு முழுவதும் மகாசிவராத்திரி விழா நடக்கிறது. பிப்., 19 ல், சந்தன அலங்காரம், அங்காளம்மன் அன்னவாகனத்தில் வீதியுலாவும், இரவு சிம்ம வாகனத்தில் பாரி வேட்டையும் நடக்கிறது. பிப்., 21 ல் காலை 6 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வருதல், பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கும். விழாவில் தருமபுரம் ஆதினம் குமாரசாமி தம்பிரான் மற்றும் பல மடாதிபதிகள் கலந்து கொள்கின்றனர்.