பதிவு செய்த நாள்
19
பிப்
2015
11:02
நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெருவிழா பிப்.,23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப்.,24ல் காப்பு கட்டுதல் நடைபெறும். நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெருவிழா வரும் 23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பிப்.,24ம் தேதி பக்தர்கள் உலுப்பக்குடி அருகே உள்ள கரந்தன் மலையில் உள்ள கன்னிமார் கோயில் தீர்த்த அருவியில் நீராடி தீர்த்தக் குடங்கள் எடுத்து வருவர். அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமி கோயிலில் வணங்கி பின்பு கோயிலுக்கு ஊர்வலமாக வருவர். பின், அம்மனுக்கு அபிஷேகம் அர்ச்சனையும் செய்து காப்புக்கட்டுவர். தொடர்ந்து 15 நாட்கள் விழா நடைபெறும். தினமும் அம்மன் சிம்மம், அன்னம்,கேடய வாகனங்களில் வருவார். திருவிழாவின் முக்கிய விசேஷமாக மார்ச் 10ல் வழுக்குமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல், 11ம் தேதி அம்மன் பூப்பல்லக்கில் வலம் வருதல் நடைபெறும். செயல்அலுவலர் ஞானசேகரன், பரம்பரை பூஜாரிகள் சொக்கையா, சின்னராசு, நடராசு, மூர்த்தி செய்து வருகின்றனர்.