சிவகங்கை: சிவகங்கையில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சுவாமிக்கு பன்றியை படையலிட்டு ரத்தம் குடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகங்கை, மதுரை வீரன் சுவாமி கோயிலில் மாசி சிவராத்திரி அன்று பில்லி பூஜை நடக்கும். நேற்று நடந்த விழாவில் அக்கோயிலை சேர்ந்த பங்காளிகள் தங்கள் வீடுகளில் வளர்த்த பன்றிகளை சுவாமிக்கு படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். முதலில் குட்டி பன்றியை வெட்டி ரத்தத்தை பூஜாரி அப்படியே குடித்தார். அதை தொடர்ந்து 3 பன்றிகளை வெட்டி சுவாமிக்கு படையல் இட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின் சமைத்து விருந்து அளித்தனர்.