செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நாளை தீ மிதி விழா நடக்க உள்ளது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி பெரு விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 18ம் தேதி மயானக்கொள்ளை விழா நடந்தது. 5ம் நாள் விழாவாக நாளை மாலை 4.30 மணிக்கு தீமிதி விழா நடக்க உள்ளது. 23ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்க உள்ளது.