காரைக்கால்: மேலகாசாகுடி நாகநாத சுவாமிக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் வெள்ளி நாகாபரணம் அணிவிக்கப்பட்டது. காரைக்கால் நெடுங்காடு மேலகாசாகுடி அபிதகுஜாம்பாள் சமேத நாகநாத சுவாமி கோவிலில், பக்தர்களின் பொருளுதவியில் செய்யப்பட்ட ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள புதிய வெள்ளி நாகாபரணம் அணிவிப்பு, மகா சிவராத்திரி விழா நடந்தது. அதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.