திருவப்பூர் முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2015 11:02
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசிப் பெருந்திருவிழா தொடர்ந்து 16 நாட்கள் நடப்பது வழக்கம். இக்கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி காலையில் இருந்தே நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் ஏந்தியும் கோயிலுக்குச் சென்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து இரவு தொடங்கி அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், மின் அலங்கார ஊர்திகளில் அம்மன் உருவச்சிலையுடன் பூத்தட்டு ஏந்தி பூக்களை காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர்.