சாயல்குடி : சிக்கல் அருகே ராஜாக்கள்பாளையத்தில் முத்துராகவ அம்மாள்,ராமலட்சுமி அம்மாள் கோயிலில் நேற்று 10 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஊராட்சி தலைவர் ரமேஷ்பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாயல்குடி வழிவிடுமுருகன் கோயிலில் நேற்று காலை 9.50 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஜமீன்தார் சிவஞானபாண்டியன் தலைமை வகித்தார். காங்., கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, நிர்வாகிகள் குண சேகரன், பழனிக்குமார், நாகேந்திரன் பங்கேற்றனர்.