Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நித்ய கல்யாண பெருமாள் ... மூங்கில் துறைப்பட்டில் பிரதோஷ வழிபாடு! மூங்கில் துறைப்பட்டில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் வள்ளியம்மை திருக்கல்யாணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2015
12:03

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில், முக்கிய நிகழ்ச்சியான வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி, நேற்று அதிகாலை, நடந்தது. இதில் இருளர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் என, திரளானோர் வழிபட்டனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Default Image
Next News

எட்டாம் நாளான, நேற்று முன்தினம், காலை, யாளி வாகனத்தில், ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார். அங்கு பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நள்ளிரவு, 1:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் மலைக்கோவிலில் வீதியுலா வந்தார். அப்போது, இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர், சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு அழைத்து சென்றனர்.

பின், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பக்தர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர். நேற்று, காலை, 6:00 மணிக்கு, கேடய வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 5:00 மணி கதம்பப் பொடி விழாவும், இரவு, 8:00 மணிக்கு ஆறுமுக சுவாமிக்கு உற்சவ விழா நடந்தது. இன்று, கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar