பழநி: பழநி தேரோடும் வீதியில் கடைகளின் ஆக்கிரமிப்பால் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பழநி கிழக்குரத வீதி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்., 13 ல் துவங்கியது. இன்று மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்திற்கு பெரியநாயகி அம்மன் கோயில் பெரியதேர் பயன்படுத்தப்படும். இதற்காக அத்தேர் கிழக்குரத வீதி வழியாக மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, அதன்பின் தேரோட்டம் துவங்கும். தற்போது கடைகளின் ஆக்கிரமிப்பால் 40 அடி கிழக்கு ரதவீதி 5 அடியாக சுருங்கிவிட்டது. இதனால் தேரை கோயிலுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் வேலுமணி கூறுகையில், "வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றி, தேர் இழுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.