பொள்ளாச்சி: பொள்ளாச்சி சேர்வைக்காரன் பாளையம் விநாயகர், காளியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழா நடந்தன. விழாவையொட்டி, மூன்று கால யாக பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து, காளியம்மன் விமானம் கும்பாபிேஷகம், விநாயகர், காளியம்மன் மகா கும்பாபிேஷகமும் நடந்தன. தச தானம், தச தரிசனம், மகாஅபி ேஷகம் உள்ளிட்ட பூஜைகளும் இடம்பெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.