பதிவு செய்த நாள்
09
மார்
2015
12:03
பெங்களூரு: சத்ய சாய் சேவா கமிட்டி’ அறக்கட்டளை சார்பில், பெங்களூருவில் நடைபெற்று வரும், அதிருத்ர மகா யக்ஞத்தில் நேற்று, வேத பாராயணம், பஜனைகள், அபிஷேகத்துடன் சிறப்பு புஷ்பாபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெற்றன.
சத்ய சாய் சேவா கமிட்டி’ அறக்கட்டளை சார்பில், பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள பிருந்தாவனில், அதிருத்ர மகா யக்ஞம்’ நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று காலை, வேத பாராயணம், பஜனை நடந்தது. தொடர்ந்து, 90 கிலோ மலர்களால் புஷ்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. புஷ்பாபிஷேகத்திற்கு பின் மங்கள ஆரத்தியுடன் காலை நேரப் பூஜை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.