ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் பூக்குழி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2015 10:03
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 9.15 மணிக்கு தலைமை பூஜாரி ஹரிஹரன், சுந்தர்பட்டர், சுந்தர் கொடி ஏற்றினர். அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபராதனை நடந்தது.தக்கார் ராமராஜா, வி.பி.எம். சங்கர், டி.எஸ்.பி.,முரளிதரன், முன்னாள் அறங்காவலர்கள் ஆறுமுகம், பொன்மனிராமநாதன் பங்கேற்றனர்.