பதிவு செய்த நாள்
10
மார்
2015
10:03
சபரிமலை: பங்குனி மாத பூஜைக்காக, சபரிமலை நடை, வரும் 14ம் தேதி மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது.மாசி மாத பூஜைகள் முடிந்து, கடந்த மாதம், 17-ம் தேதி இரவு, நடை அடைக்கப்பட்டது. தற்போது, பங்குனி பூஜைக்காக, சபரிமலை நடை, வரும், 14-ம் தேதி மாலை, 5:30 மணி-க்கு திறக்கப்படுகிறது.தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். அன்றிரவு, வேறு எந்த விசேஷ பூஜைகளும் கிடையாது; இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். பின், 15-ம் தேதி முதல், 19-ம் தேதி வரை, தினமும் அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு; இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.