கீழக்கரை : திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் சமேத பத்மாஸனித் தாயார் கோயிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோயில் விமானங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றது. சமஸ்தான ஓவர்சீயர் கதிரேசன் கூறுகையில், ""ரூ.24.5 லட்சத்தில் கோயிலின் 5 விமான கோபுரங்கள், தாயாரின் குடவரை கோபுரம், ராஜகோபுரம் இவற்றில் வர்ணம் பூசும் பணிகள் நடந்துவருகிறது. கோயிலில் உள்ள பழமை வாய்ந்த தூண்களை சீரமைக்க தொல்லியல் துறை ஆணையரின் அறிவுரைக்கிணங்க, மத்திய தொல்லியல் உயர்நிலை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர், என்றார்.