காரைக்குடி:காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி விழா நேற்று காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை துவங்கினர். மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
வருகிற 17-ம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கோயில் கரகம், மதுக்குடம் முளைப்பாரி நிகழ்ச்சி, 18-ம் தேதி காலை 9.30 மணிக்கு திருக்கோயில் காவடி முத்தாளம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி, பால் குட ஊர்வலம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருக்கோயில் கரகம், மதுக்குடம் முளைப்பாரி புறப்பட்டு, பருப்பூரணி கரையில் விடப்படும். 19-ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 20-ம் தேதி சந்தனகாப்பு அலங்காரமும் நடக்கிறது. ஏப்ரல் 16-ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.செயல் அலுவலர் பாலதண்டாயுதம், கணக்கர் அழகுபாண்டி மற்றும் கோயில் ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.