பதிவு செய்த நாள்
23
ஜூன்
2011
10:06
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. பக்தர்கள் ஆறு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலுத்தியிருந்தனர். தஞ்சாவூர் பெரிய கோயிலில்களில் உள்ள ஒன்பது உண்டியல்களும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் உதவி ஆணையர் சிவாஜி, நாகை உதவி ஆணையர் கோதண்டராமன், ஆய்வர் மனோகரன் ஆகியோர் முன்னிலையில் பெரிய கோயில் மூலவர் சன்னிதியில் உள்ள மூன்று உண்டியல், வராஹி அம்மன் சன்னிதி உண்டியல், கருவூர் சித்தர் சன்னதி உண்டியல், பெரியநாயகி அம்மன் சன்னதி, நந்தி மண்படபம் உட்பட ஒன்பது உண்டியல்கள் நேற்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் செலுத்திய சில்லரை காசு, பணம், வெளிநாட்டு கரன்சி, தங்கம், வெள்ளி நகை உட்பட பல்வேறு பொருட்களை தரம் பிரித்து எண்ணும் பணியில் மகளிர் உதவிக்குழுவினர், பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவர்கள், திருக்கோயில் பணியாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இதில், பக்தர் ஒருவர் 1,000 ரூபாய் நோட்டுகளாக ஒரு லட்சம் ஒரே கட்டாக உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தார். மொத்தம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது ரூபாய் ஆறு லட்சத்து 13 ஆயிரமாகும். இதில், வெளிநாட்டு கரன்சி நோட்கள் 64 நான்கு இருந்தது. இதன் மதிப்பு தெரியவில்லை. மேலும் தங்கம், வெள்ளி நகைகள் குறைந்த அளவே இருந்ததால் அவை திரும்பவும் உண்டியலிலேயே போடப்பட்டது.