பதிவு செய்த நாள்
11
மார்
2015
11:03
ராசிபுரம்:சின்னகாக்காவேரி மாரியம்மன், விநாயகர், மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.ராசிபுரம் அடுத்த, சின்னகாக்காவேரியில் மாரியம்மன், விநாயகர், மதுரைவீரன் கோவில், திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, சீராப்பள்ளி ஈஸ்வரன் கோவிலில் இருந்து, வாணவேடிக்கையுடன் குதிரை வாகனத்தில் காவிரி தீர்த்தம் கொண்டும் வரும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, கோபுர கலசம் வைத்தல், அனுக்ஞை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், மிருச்சாங்கிரஹணம், ரஷபாந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேஷம், முதற்கால யாகபூஜை, அஷ்டபந்தன நாடி சந்தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.மேலும், இரண்டாம் கால யாகபூஜை, தீபாராதனை, யாத்ராதானம்,கடம் புறப்பாடு நிகழ்ச்சியுடன், கோபுர கலசம், மாரியம்மன், விநாயகர், மதுரைவீரன் ஸ்வாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, மாரியம்மன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சின்னாக்காவேரி அதன் சுற்றவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.