ஒடுக்கு பூஜையுடன் மண்டைக்காட்டில் மாசி கொடை விழா நிறைவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2015 10:03
நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 10 நாள் கொடை விழா ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது. இந்த ஆண்டுக்கான கொடை விழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் தேவி பல்லக்கில் எழுந்தருளல் நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. 21 வகையான பதார்த்தங்களுடன் சோறு சமைக்கப்பட்டு அதை ஒன்பது மண் பானைகளில் வைத்து, அதை பூஜாரிகள் வாயில் சிவப்பு துணியை கட்டியபடி, தலையில் சுமந்து வந்தனர். இந்த பானைகள் வெள்ளை துணிகளால் மூடப்பட்டிருந்தது. கோயிலில் வந்ததும் இவை அம்மனுக்கு படைக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிசப்தமான சூழ்நிலையில் நடைபெறுவது இந்த பூஜையின் சிறப்பாகும்.