வால்பாறை: அக்காமலை எஸ்டேட் அருள்சக்திமாரியம்மன் கோவில் மண்டலபூஜை நிறைவு விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வால்பாறை அடுத்துள்ளது அக்காமலை எஸ்டேட். இங்குள்ள அருள்சக்தி மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் திருப் பணி இப்பகுதி பொதுமக்களால் கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 48 நாட்களாக மண்டல பூஜை நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று முன்தினம் அம்மனுக்கு அபிேஷக பூ ஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. விழாவில் நேற்று காலை விநாயகர், காளியம்மன் ஆகிய கோவில்களிலிருந்து மாங்கல்ய சீர்வரிசை கே ாவிலுக்கு கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு மாங்கல்யம் சாத்தப்பட்டது. பின் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று பகல் 12:30 மணிக்கு எஸ்டேட் மேலாளர் திலக்சத்ரி, உதவி மேலாளர் செல்வராஜ் ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.