கோபிசெட்டிபாளையம்: கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியலில் 2.53 லட்சம் ரூபாய், சங்கரர் திருப்பணி உண்டியலில் 1.18 லட்சம் ரூபாய், மற்றும் 76 கிராம் தங்கம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கம்பன் கல்வி நிறுவன என்.எஸ்.எஸ்., மாணவர்கள், நுகர்வோர் நல வாழ்வு மற்றும் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் ஈடுபட்டனர். பண்ணாரியம்மன் கோவில் துணை கமிஷனர் அழகர்சாமி, செயல் அலுவலர் பழனிமுருகன், பவானி சங்கமேஸ்வரர் கோவில் சூப்பிரண்டு பாலசுந்தரி, ஆய்வாளர் கமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.