பதிவு செய்த நாள்
19
மார்
2015
10:03
காரைக்குடி : காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி - பங்குனி விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆயிரக்கணக்கானோர் காப்பு கட்டி, மஞ்சள் ஆடை அணிந்து விரதத்தை துவக்கினர். கடந்த 15-ம்தேதி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு முத்தாளம்மன் கோயிலிலிருந்து திருக்கோயில் கரகம், மதுக்குடம் முளைப்பாரி புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது. நேற்று காலை 8 மணிக்கு முத்தாளம்மன் கோயிலிலிருந்து, திருக்கோயில் காவடி, பால்குடம், அக்னிகாவடி, அக்னி சட்டி புறப்படாகி, கோயிலை வந்தடைந்து அங்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஏராளமானோர் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை 4 மணிக்கு திருக்கோயில் கரகம், மதுக்குடம் முளைப்பாரி புறப்பட்டு, பருப்பூரணி கரையில் விடப்பட்டது. இன்று மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், 20-ம் தேதி சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. நகரின் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் பாலதண்டாயுதம், கணக்கர் அழகுபாண்டி செய்திருந்தனர்.