ஒரேநாளில் பிரதோஷம், சிவராத்திரி கோயில்களில் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2015 11:03
வத்திராயிருப்பு : சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷம், சிவராத்திரி நேற்று ஒரேநாளில் சேர்ந்து அமைந்ததால் வத்திராயிருப்பு பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. வத்திராயிருப்பு அருகே மூவரைவென்றானில் உள்ள மரகதவல்லி சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு அதிகாலை அபிஷேகங்களுடன் சிவராத்திரி வழிபாடு நடந்தது. மாலையில் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ பூஜைகள் நடந்தது. 18 விதமான அபிஷேகம், பக்தர்களின் தேவார பாராயண வழிபாடு , சிறப்பு பூஜைகளும் நடந்தது.வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் காலையில் சிவபெருமானுக்கு சிவராத்திரி பூஜை , அபிஷேகம் நடந்தது. மாலையில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. உற்சவர் காளைவாகனத்தில் எழுந்தருளியதை தொடர்ந்து சப்பர ஊர்வலம் நடந்தது. தேவார பாராயணத்திற்கு பின் தீபாராதனை நடந்தது. வத்திராயிருப்பு சேனியர்குடி சொக்கநாதர் கோயிலில் நடந்த சிவராத்திரி வழிபாட்டிலும், பிரதோஷ பூஜைகளிலும் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.