ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயிலில் இன்று பூக்குழி விழா நடக்கிறது.இதை தொடர்ந்து நாளை தேரோட்டம் நடக்கிறது. இக் கோயில் திருவிழா கடந்த 9ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்பாள் வீதி உலா, ஆன்மிக சொற்பொழிவு நடந்து வருகிறது. 12 ம் நாளன இன்று மதியம் 1.35 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குவர். நாளை (மார்ச் 21)மதியம் 12.15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா, தக்கார் ராமராஜா செய்துள்ளனர்.